தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 26-அலைக்கடலுக்கு அப்பாலும் அரும்பெயர்
அலைக்கடலுக்கு அப்பாலும் அரும்பெயர்
பொற்கைப் பாண்டியன் முதல் கனகப் பாண்டியன்
வரை
தமிழரின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடல் அலைகளில் பயணிக்கிறது. நாமோ பெரும்பாலும் தமிழகத்தின் எல்லைகளுக்குள் மட்டுமே நம் பெருமையை நோக்குகிறோம்; ஆனால் நம் முன்னோர்கள் சென்ற பாதைகள் அதைவிடப் பரந்தவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியப் பெருங்கடல் அலைகளோடு சேர்ந்து தமிழர் நடை, தமிழர் மொழி, தமிழரின் நீதி மரபு கீழ்த்திசை நாடுகளுக்குப் பாய்ந்து சென்றிருக்கிறது. சுமத்ரா, மலாக்கா, ஜாவா, கம்போடியா, வியட்நாம்… மேலும் அதையும்.... தாண்டி.....லாவோஸ் என்ற பண்டைய தேசத்தின் இதயப் பகுதிகள்வரை!
இன்று உலக வரலாற்றாளர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு அதிசயம்:
கி.பி.
5ஆம்
நூற்றாண்டிலேயே
லாவோஸ்
நாட்டின்
கல்வெட்டுகளில்
தமிழர்
பெயரும்,
பாண்டியர்
நீதி
மரபும்
பதிந்துள்ளன!
தமிழில்
“பொற்கைப்
பாண்டியன்”.
சமஸ்கிருதத்தில் லாவோஸில் “கனகப்
பாண்டியன்”.
இரண்டும் ஒரே வரலாற்றின் இரண்டு முகங்கள்!
பொற்கைப்
பாண்டியன்- நீதியின்
முகம்
சிலப்பதிகாரத்தின்
கட்டுரைக் கதையின் இந்தப் பாடலைக் கொஞ்சம் கேளுங்கள்
உதவா
வாழ்க்கைக் கீரந்தை மனைவி,
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
“அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல்” என மொழிந்து,
மன்றத்து இருத்திச் சென்றீர்: அவ்வழி
இன்று அவ் வேலி காவாதோ?, என,
செவிச் சூட்டு ஆணியின், புகை அழல் பொத்தி,
நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் கை அமரர் கோமான்
உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,
இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை:
(மதுரைக் காண்டம் - கட்டுரைக்
காதை – 2.13: 42-53 )
கண்ணகியின்
வஞ்சினத்தால் மதுரை மாநகர் எரிந்தபோது, மதுரை நகரின் பெருந்தலைவியாம்
பாண்டியர்களின் குல முதல்வியான அன்னை, கண்ணகியிடம் நேரில் வந்து, அவளை
அமைதிப்படுத்துகிறாள். பாடல் வர்ணனைகளிலிருந்து அவள் மதுரையின் காவல் தெய்வம்
மீனாட்சியே என அறிகிறோம்.
அவள்,
ருத்ரதேவியாக நிற்கும் கண்ணகியிடம், பாண்டியர் குலச் சிறப்பையும், கோவலனின்
ஊழ்வினையையும் விளக்கமாகக் கூறுகிறாள். அதுகேட்டு கண்ணகியின் கோபம் தணிகிறது;
மீதமுள்ள மதுரை தப்பிப் பிழைக்கிறது. அப்போது பாண்டியர் குலச் சிறப்பைக்
கூறுகையில்ல், பொற்கைப் பாண்டியனின் கதையைக் கூறுகிறாள் மதுராபுரி மங்கை.
“கீரந்தை
என்பவன், மனைவிக்கு உதவ இயலாத நிலையில் வெகுதொலைவில் இருந்தான். தனித்திருந்த அவன்
மனைவியின் வீட்டை பாண்டிய மன்னன் பாதுகாத்து வந்தான். இரவுக் காவலனாக பாண்டிய
மன்னனே மாறுவேடத்தில் அப்பகுதியைக் கண்காணித்து வந்தான்.
ஒருநாள்
இரவு கீரந்தை திரும்பி வந்து மனைவியிடம் உரையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதனை
வேறு யாரோ என ஐயுற்ற பாண்டியன் அவள் வீட்டுக் கதவைத் தட்டினான்; பிறகு உண்மை
உணர்ந்தான். எனினும், கீரந்தை தன் மனைவியை ஐயுறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக,
அருகிலுள்ள வீடுகளின் கதவுகளையும் பாண்டியன் தட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.
மறுநாள்
அனைவரும் அரசவையில் இதுகுறித்து முறையிட்டனர். ‘அரசனின் பாதுகாவல் வேலி தவிர
வேறு பாதுகாவல் வேலி இல்லாமல் இருந்த எங்களுக்கு அரசனின் பாதுகாவல் வேலி
பொய்த்துவிட்டதே’ என்று அவர்கள் முறையிட்டனர். அந்தச் சுடுசொல்லைக் கேட்ட
பாண்டியன், கதவுகளைத் தட்டிய தன் கையைத் தானே வெட்டிக்கொண்டான்.
வச்சிரப்
படை கொண்ட தேவேந்திரன் தலைமுடியில் வீர வளையல் அணிந்த தன் கைகளால் அடித்து அவன்
மணிமகுடத்தை பாண்டியன் ஒருவன் உடைத்தான். அப்படிப்பட்ட பெருமை மிக்க கையை
வெட்டிக் கொண்டான் மன்னன். அப்படிப்பட்ட வளையாத கோல் பாண்டியனின் செங்கோல்”
என்கிறாள்- மதுராபுரி தெய்வம்.
அப்படிப்பட்ட
இந்த பொற்கைப்பாண்டியனின் நீதி தவறா நெஞ்சம் சிலப்பதிகாரத்தில் மட்டும் அல்ல.
பாடல் (பாடல் எண் 102) ஒன்றும் பொற்கைப் பாண்டியன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது.
எனக்குத் தகவன்றால்’ என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய், தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை.
தான் செய்த செயல் தனக்குத் தகுதி இல்லாதது என்பதை எண்ணிப் பார்த்து, தன்
செயலுக்குத் தானே சாட்சி சொல்லுபவனாக இருந்து தான் செய்த
தவற்றினுக்காகப் பொற்கைப் பாண்டியன் என்னும் தென்னவன் தன் கையைத் தானே
வெட்டிக்கொண்டு தனக்குத் தானே தண்டனை வழங்கிக்கொண்டான். “யாரும்
பார்க்கவில்லை
என்பதற்காக
தவறைச்
செய்யாதவன்
தான்
உண்மையான
மன்னன்.”
தமிழர்
அரசியல் மரபின் உயரம் — செங்கோல் — அதன் ஒளி பொற்கைப் பாண்டியனின்
நெஞ்சில் ...
இப்படிப் பல பாடல்கள் நீதி வழுவா நெறி முறையின்மானம் அழிந்தால் மரணம் என்ற
வகையில் வாழ்ந்த பாண்டியரின் வழித் தோன்றலான பொற்கைப் பாண்டியனின் சிறப்பைக் கொண்டாடிப்
பாடுகின்றன.
சிலப்பதிகாரத்தின் காலம் :
சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்
எழுந்த காப்பியம் என்பது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இதற்கான அடிப்படைச்
சான்றுகளில் ஒன்று இளங்கோ சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது. இச்செங்குட்டுவன்
சங்க இலக்கியத்தில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பாடப் பட்டவன்; இவன் காலம் கி.பி.
இரண்டாம் நூற்றாண்டு.
அடுத்த சான்று, வரந்தரு காதையில் இடம் பெறும்
கண்ணகி வழிபாட்டில் இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்டான்
என்பது. இவன் காலமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது இலங்கை வரலாற்றால்
அறியப்படுகிறது.
பழமொழி நானூறு காலம் : சங்கம்
மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒன்றாசங்க காலத்தினைப் பற்றி அதிகத் தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி.பி.
நான்காம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.
சரி இப்போது எதற்காக கடைச்சங்க காலத்து பாண்டிய
மன்னனைப் பற்றி பேசுகிறோம்? தலைப்பில் 'அலைக்கடலுக்கு அப்பால்' என்றெல்லாம் பீடிகை
போட்டு விட்டு கடைச்சங்க காலத்தின் பாடல் வரிகளை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோமே
என்பது தானே உங்கள் மனதின் குரல் இப்போது. காரணம் இல்லாமல் இல்லை. ஒரு கவிஞன் /
புலவன் தன்னைச் சுற்றித் தான் கேள்விப்பட்ட, தன்னை பாதித்த முதன்மையான விவரங்களைத்
தன் பாடல்களில் வடித்து விடுவான்.
கண்ணகியின் காலமான 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய
கால கட்டத்திலேயே தமிழகக் கிழக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்ட தமிழ் வணிகர்களின்
காலங்கள் கீழ்த்திசை நாடுகள் முழுவதும் பயணித்து பொன்னும் பொருளும் மட்டுமா
குவித்தன? தமிழரின் பண்பாடையும், தமிழனின் உயரிய தன்மான உணர்வுகளையும், ஆட்சி
திறமைகளையும் கடல் கடந்து கொண்டு சேர்த்து தமிழக்தின் ஒளி வெள்ளம் கீழ்த்திசைக்
கரைகள் யாவும் பாயும் வண்ணம் செய்து இருந்தன. நமது அரசுகளின் ஆதரவு கடல்
வணிகர்களுக்கு பக்க பலமாக இருந்தது.. மன்னர் சார்பில்தான் தன வணிகம் கடல் சார்ந்து
நடந்து வந்தது. இப்படி, நமது மதுரை மண்ணின் மன்னனான பொற்கைப் பாண்டியனின் பெரும்
பெயரும் புகழும், நீதி அரசர்' என்றால் இவர் போல அல்லவா திகழ வேண்டும் என்று
கீழ்த்திசை நாடுகள் முழுவது பறை அறிவித்திருந்த நேரம்.
லாவோஸ் பயணிப்போம் :
இந்தத் தமிழக நிகழ்வுகளை மனத்தில் ஏற்றிக் கொண்டு அப்படியே லாவோஸ் (LAOS ) புறப்படுவோம். லாவோஸ்
தெற்கில் உள்ள வாட் பூ
– சம்பாசக் 2.4 கிமீ x 1.8 கிமீ அளவில் இருக்கிறது.
இங்கே கிடைத்த அரிய பொக்கிசங்கள் :
·
தென்கிழக்கு
ஆசியாவில் அறியப்பட்ட மிகப் பழமையான சமஸ்கிருத கல்வெட்டு (கி.பி. 450) -
தேவனிகாவின் சம்பசக் கல்வெட்டு.
·
தென்கிழக்கு
ஆசியாவில் ஆரம்பகால தமிழ் கல்வெட்டுகளில் சில (6 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை),
·
மீகாங்
நதிக்கரையில் அறியப்பட்ட ஆரம்பகால சிவன், விஷ்ணு மற்றும் துர்கா (அங்கோருக்கு
முந்தைய) இந்து கலைப்படைப்புகள் மற்றும்
·
பண்டைய
முதல் இடைக்கால இந்து கோயில்களின் ஏராளமான இடிபாடுகள் உள்ளன.
இவை சேர்ந்து சொல்வது —
இந்த மண்டலத்துள் இந்திய–தமிழர் வருகையை ..
Sources:
·
1.
Michel Lorrillard (2015), Pre-Angkorian Communities in the Middle Mekong Valley
(Laos and Adjacent Areas)
·
2.
Marielle Santoni (2015), The French archaeological mission and Vat Phou
·
3.
Willard Van De Bogart (2008), A Pilgrimage to the Holy Land of Kuruksetra, The
South East Asian Review Volume XXXIII Number
அத்துடன்
·
நொபுரு
கரஷிமா
·
ய.
சுப்பாராயுலு
இவர்களின் ஆய்வுகள் —
நமது பாண்டியர் மரபின் அடையாளத்தை லாவோஸ்
நாட்டின்
கல்வெட்டுகளில்
கண்டறிகின்றன!
லாவோஸின் தெற்கு முனையில் வாட் பூ
(Wat Phou) சாம்பசக்
அமைந்துள்ளது. வரலாற்றின் பத்திகளில் நீண்ட காலமாக இடம்பிடித்துள்ள இந்த பழங்கால
கோயில், தென்கிழக்கு ஆசியாவின் பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகக்
கருதப்படுகிறது.
கோவிலின் சிதைந்த வடக்குப் பகுதி
சம்பாசக் மாகாணத்தில் உள்ள ஒரு
பாழடைந்த கெமர்-இந்து கோயில் வளாகம். இது லாவோஸில் உள்ள இரண்டாவது பௌத்த தலமாகும்.
இந்தக் கோயில் லிங்கபர்வதம் என்ற புனித மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, அந்த
மலை உச்சியின்
லிங்க வடிவ வளர்ச்சி காரணமாக ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது. சிலர் இந்த இடம் சிவனின் வீடாகக் கருதினர், அவருக்கு இந்த இடம்
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மலையும் பூ காவோ (Phu Kao) என்றும்,
அதிலிருந்து கோயில் அதன் பெயரைப் பெற்றது என்றும் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இதனால் வாட் பூவை (Wat Phu) ‘'மலைகளின் கோயில்' என்று அழைக்கலாம். பல இந்து
கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் போலவே, இது கிழக்கு நோக்கி உள்ளது.
கண்ணனின் கம்சவதம் - சிற்பமாகச் சிதைந்த கோவில் பாகங்களில்
·
கி.பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்தே இங்கு கற்கால சிற்பங்கள் காணப்படுகின்றன.
·
5ஆம் நூற்றாண்டில் கெமர் கட்டிடக்கலையின் ஆரம்ப வடிவம்.
·
7ஆம் நூற்றாண்டில் முதல் செங்கல் கோயில்கள்.
·
11–13ஆம் நூற்றாண்டுகளில் அங்கோரிய வடிவங்களால் மாற்றம்.
கருட - விஷ்ணு சிற்பங்கள்
இன்று அதன் உள்ளே ஒரு பெரிய புத்தர் சிலை நிற்கிறது — காலமாற்றத்தின் சாட்சி போல.
·
பின்னர்
—
இந்துக் கோவில் → தேரவாத பௌத்த ஆலயம் என இரண்டு நூற்றாண்டுகளில் உருமாறியது.
BHUDHA STATUE INSIDE NOW
பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, வாட் ஃபூ ( Wat Phu) கெமர்
பேரரசின் (Khmer Empire) ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் 11ஆம் நூற்றாண்டு வாக்கில் நிறைய மாற்றங்கள்... கோவிலுக்கு நேர் தெற்கே ஒரு புதிய நகரம் வளர்ந்து ஷ்ரேஷ்டாபுராவை மாற்றியது. இந்தக்கோவிலின் கட்டிடங்களின் அமைப்புகள் மாற்றப்பட்டன. அடுத்த 200 ஆண்டுகளில் மற்ற கெமர் அரச கோவிகளைப் போல உரு மாறி தேரவாத பௌத்த கோவிலாக வடிவெடுக்க வைத்து விட்டது. இப்படித்தான் பல சிவன் கோவில்கள் பௌத்த ஆலயங்களாக உரு மாறி இருக்கின்றன தென் கிழக்கு ஆசிய நாடுகளில்....
குன்றேறும் படிகள் - மரங்களின் வேர்களில் ...
சரி. கோவில் பற்றி பேசுவதற்கு அல்ல இந்தப் பகுதி.
இந்தக் கோயிலின் கல் தூண்களில் ஒன்று —
எங்கள் வரலாற்றை லாவோசில் பதித்த
மரபுக் கல்வெட்டு.
அதுதான்:
சம்பாசக் கல்வெட்டு – தேவானிகா:
இங்கே கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆய்வாளர்கள் நொபுரு கரஷிமா மற்றும் ய.சுப்பாராயுலு அவர்களால் ஆய்ந்து பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 'தேவானிகாவைச் சேர்ந்த சம்பா கல்வெட்டு' என்ற பெயரில், 'நாகப்பட்டினத்திலிருந்து சுவர்ணதிவீபம் வரை (NAGAPPATTINAM TO SUVARNADWIPA ) புத்தகத்தில் பிற்சேர்க்கை 1 என்ற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
CHAMPASSAK INSCRIPTION OF DEVANIKA
தேவனிகர் 5ஆம் நூற்றாண்டில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் தென் லாவோஸ் பகுதியினை ஒரு இந்து அரசாக நிர்மாணித்து 'குருசேத்திரம் ' போன்ற நகருடன் சிறப்பாக ஆட்சி செய்தார் ஏன்னு இந்தக் கல்வெட்டு பறைகிறது.
இது அவரை "கனக பாண்டியன்" என்று அழைக்கிறது, இது தமிழ் இந்து காவியமான
சிலப்பதிகாரத்தில் காணப்படும் ஒத்த சொற்றொடருக்கு இணையாக உள்ளது. இந்த கல்வெட்டு,
தமிழ் இந்து மற்றும் சமஸ்கிருத செல்வாக்கு கி.பி 450 க்கு முன்பே தெற்கு லாவோஸில்
வந்திருப்பதைக் குறிக்கிறது. கல் தூணில் உள்ள இந்த கல்வெட்டு,தேவானிகா இளவரசனைப் புகழ்ந்து இந்து புராண நாயகர்களோடு ஒப்பிடுகிறது. அதன் வர்ணனை:
“அவன்
கனகப்
பாண்டியன்
போன்ற
நீதிமான்.”
இதுதான் நம்மை வியக்க வைக்கும் சந்திப்பு.
தமிழில்
“பொற்கைப் பாண்டியன்”.
சமஸ்கிருதத்தில் “கனகப் பாண்டியன்”.
ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள்:
“இரண்டும் ஒரே நீதி மரபின் பிரதிபலிப்பு.”
முடிவு – கடல் கடந்த செங்கோல்
இந்த கல்வெட்டு,
தமிழ் இந்து மற்றும் சமஸ்கிருத செல்வாக்கு கி.பி 450 க்கு முன்பே தெற்கு லாவோஸில் வந்திருப்பதைக்
குறிக்கிறது. இவ்வாறு பார்த்தால்:
- பொற்கைப் பாண்டியனின் நீதிக் கதையும்
- லாவோஸில் காணப்படும் கனகப் பாண்டியனும்
- இரண்டும் அதே பாண்டிய மரபின் வெளிச்சம்.
இந்தியப் பெருங்கடலைத் தாண்டி, சாவகம், கடாரம், கெமர் மட்டுமல்ல —
லாவோஸ் நாட்டின் மண்ணிலும் தமிழரின் நீதி மரபு கல்வெட்டாக பதிந்துள்ளது.
இது எங்கள் வரலாற்றின் மிகப்பெரிய பெருமை.
கருத்துகள்
கருத்துரையிடுக