அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 41
அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி பகுதி : 41 12-02-2018 அன்புசொந்தங்களே ! தேவகோட்டை திருப்பத்தூர் சாலை ஆயுர் வேத மருத்துவனை முன்பு நிற்கின்றோம் . நல்ல உள் முத்தம் வைத்த கட்டிடம் . மேலே செல்லும் படிகள் வழியாக ஏறி சென்றால் , தலைக்கு மேல் மின் விசிறி சுழல டாகடர் . இராஜகோபாலன் அமர்ந்து இருப்பார் . அவருக்கு முன் இருந்த டாகடர் நரசிம்மன் அவர்களைக் கேள்வி பட்டு இருக்கிறேன் , பார்த்தது இல்லை . மருத்துவர் இராஜகோபால் தான் நல்ல பழக்கம் . நேற்று இது பற்றி என் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்த போதுதான் அறிவேன் மருத்துவருடைய மூத்த மகள் என் மனைவியின் வகுப்புத்தோழி என்று . உள்ளே டாக்டரைக் கடந்து அடுத்த மூலைக்கு சென்றால் கம்பௌண்டர் கோபாலன் அவர்களின் அறை . ஒரு mid wife இருப்பார் . அவர் முகம் நினைவில் உள்ளது . பெயர் மறந்து விட்டது . அந்த முத்தம் கடந்து சென்றால் உள்ளே உள் நோயாள...