இடுகைகள்

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 41

அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி பகுதி : 41 12-02-2018 அன்புசொந்தங்களே ! தேவகோட்டை    திருப்பத்தூர் சாலை ஆயுர் வேத மருத்துவனை முன்பு நிற்கின்றோம் .   நல்ல உள்   முத்தம் வைத்த கட்டிடம் .   மேலே செல்லும் படிகள் வழியாக ஏறி சென்றால் ,   தலைக்கு மேல் மின் விசிறி   சுழல டாகடர் . இராஜகோபாலன் அமர்ந்து இருப்பார் .   அவருக்கு முன் இருந்த டாகடர் நரசிம்மன் அவர்களைக் கேள்வி பட்டு இருக்கிறேன் ,   பார்த்தது இல்லை .   மருத்துவர் இராஜகோபால் தான் நல்ல பழக்கம் .   நேற்று இது பற்றி என் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்த போதுதான் அறிவேன் மருத்துவருடைய மூத்த மகள் என் மனைவியின் வகுப்புத்தோழி என்று . உள்ளே டாக்டரைக்   கடந்து அடுத்த மூலைக்கு   சென்றால் கம்பௌண்டர் கோபாலன் அவர்களின் அறை .   ஒரு mid wife   இருப்பார் . அவர் முகம் நினைவில் உள்ளது .   பெயர் மறந்து விட்டது .   அந்த முத்தம் கடந்து சென்றால் உள்ளே உள்   நோயாள...