தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 24-தமிழன் பாதி சுமத்ரன் பாதி - கலந்து செய்த செய்த கலவை நான்
தமிழன் பாதி சுமத்ரன் பாதி - கலந்து செய்த செய்த கலவை நான் தமிழ்க் குருதி ஆண்ட பிலிப்பைன்ஸ் நாடு தமிழரின் கடல்சார் வரலாறு பெரும்பாலும் தமிழகத்தின் எல்லைகளுக்குள் மட்டுமே பேசப்படுகின்றது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் முன்னோர்கள் இந்தியப் பெருங்கடலின் அலைகளைத் தாண்டி, சுமத்ரா முதல் சாவகம், சுலு, செபு வரை தங்கள் வர்த்தக திறனாலும், கலாச்சார ஒளியாலும், மனித உறவுகளாலும் தங்கள் தடத்தை பதித்து சென்றுள்ளனர். இன்று 'உலகத் தமிழ்' என்ற பெருமையைப் பேசும் காலத்தில், நம் முன்னோர்களின் இந்த மறைந்த வரலாறுகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது நம் கடமையும் பெருமையும் ஆகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு அரச வம்சத்தில் தமிழ்க் குருதி ஓடியது என்பது கதையல்ல — மனித நெடுங்கடலில் தமிழரின் அலைச்சலின் மறக்கப்பட்ட அத்தியாயம். இந்த வரலாறு நம் இளைஞர்களுக்கு ஒரு உண்மை சொல்கிறது: “தமிழன் எங்கு சென்றாலும், தனது அறிவாலும் உழைப்பாலும் உலகத்தை வடிவமைக்கிறான்.” திரைப்பட ங்கள் பெரும்பான்மை மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன . அதிலும் குறிப்பாக , தமிழக சோழ வரலாற்...