இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 26-அலைக்கடலுக்கு அப்பாலும் அரும்பெயர்

படம்
  அலைக்கடலுக்கு அப்பாலும் அரும்பெயர் பொற்கைப் பாண்டியன் முதல் கனகப் பாண்டியன் வரை   தமிழரின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடல் அலைகளில் பயணிக்கிறது . நாமோ பெரும்பாலும் தமிழகத்தின் எல்லைகளுக்குள் மட்டுமே நம் பெருமையை நோக்குகிறோம் ; ஆனால் நம் முன்னோர்கள் சென்ற பாதைகள் அதைவிடப் பரந்தவை . ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக , இந்தியப் பெருங்கடல் அலைகளோடு சேர்ந்து தமிழர் நடை , தமிழர் மொழி , தமிழரின் நீதி மரபு கீழ்த்திசை நாடுகளுக்குப் பாய்ந்து சென்றிருக்கிறது .  சுமத்ரா , மலாக்கா , ஜாவா , கம்போடியா , வியட்நாம் … மேலும் அதையும் .... தாண்டி ..... லாவோஸ் என்ற பண்டைய தேசத்தின் இதயப் பகுதிகள்வரை ! இன்று உலக வரலாற்றாளர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு அதிசயம் : கி . பி . 5 ஆம் நூற்றாண்டிலேயே லாவோஸ் நாட்டின் கல்வெட்டுகளில் தமிழர் பெயரும் , பாண்டியர் நீதி மரபும் பதிந்துள்ளன ! தமிழில் “ பொற்கைப் பாண்டியன் ”. சமஸ்கிருதத்தில் லாவோஸில் “ கனகப் பாண்டியன் ”. இரண்டும் ஒரே வரலாற்றின் இரண்டு முகங்கள் !   பொற்...