அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 7
மாற்றம் ஒன்றே மாறாதது அன்புச் சொந்தங்களே... சில நாட்களுக்கு முன்பு இந்தத் தொடரை தொடரவா? இல்லை அலுப்புத் தட்டுகிறதா என்ற வரிகளோடு கேள்வியின் நாயகனாக ஒரு பகுதியை முடித்து இருந்தேன்.. அனைவருமே தொடருங்கள் என்றே பச்சைக்கொடி காட்டினீர்கள். மகிழ்ச்சி. ஒரு யோகி தவநிலையில் இருக்கும் வேளை எப்படி ஒரு ஏகாந்த சுகத்தில் ஆழ்ந்து உணர்வானோ அதே நிலை தான், என் மனமுவந்து என்னை நம் மண்ணின் நினைவுகளில் மூழ்கடித்துத் கொண்டு இந்தத் தொடரை நான் எழுதும் இந்த வேளை . ஆனால் 'வெட்டி வேலை' என்று சட்டென்று முகத்தில் அடிக்கும் கருத்துக் கந்த சாமிகளையும் வழியில் சந்திப்பதால் கொஞ்சம் வலியையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. இதுதான் என்னை இந்த வேள்வியில் ஒரு கேள்வியை கேட்க வைத்தது . உங்கள் அனைவரின் ஆதரவும் உங்கள் பின்னூட்டங்களும் மட்டுமே இந்த தொடரின் ராஜ பாட்டை .. அது மறக்கச் செய்யும் நான் படும் பாட்டை... நமது காலத்தில் நாமறிந்த நகரின் நினைவுகளை அசை போடுகிறோம்... இந்த மண்ணின் தியாகிகளை, தீர்க்க தரிசிகளை, உழைப்பாளிகளை, அவர்கள் ஊக்கத்தினை அறிந்து வணங்குகிறோம் . இந்த நினைவுகளை ஒரு தகப்பனின் கடமையோடு அடுத்து...